கேரள அரசின் உயரிய கவுரவத்தை நிராகரித்துள்ளார் சிற்பி கனாய் குன்ஹிராமன். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அரசால் பத்ம விருதுகளைப் போலவே உயர் மதிப்புமிக்க அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் குன்ஹிர்மானின் இத்தகைய கவுரவத்தை நிராகரித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கனாய் குன்ஹிராமன் 'கேரள ஸ்ரீ' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கனாய் குன்ஹிராமன் உருவாக்கிய அற்புதமான சாகர் கன்யா (கடற்கன்னி) சிலை உலகம் முழுவதும் பிரபலமானது.
சங்குமுகத்தில் அமைந்துள்ள சாகர் கன்யா சிலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், சிலைக்கு அருகில் ஹெலிகாப்டர் அமைப்பு அமைக்கப்பட்டு எனது சிலையின் பெருமை அழிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சிற்பங்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல், அதன் அழகை அழித்து வருவதாக கனாய் குன்ஹிர்மன் தெரிவித்துள்ளார். அரசின் அலட்சியத்தால் அவரது சிலைகள் புறக்கணிக்கப்படுவதாக சிற்பி கூறியுள்ளார். குழந்தைகள் துன்புறுத்தப்படுவதைக் காணும் ஒரு தாயாக நான் உணர்கிறேன் என்று கனாய் தெரிவித்துள்ளார். இத்தகைய மன வேதனையை அனுபவிக்கும் போது என்னால் இதுபோன்ற விருதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி கௌரவத்தை ஏற்பேன் என்று குன்ஹிர்மான் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இதையெல்லாம் பார்த்துவிட்டு நான் ஏன் விருதை ஏற்க வேண்டும்? எனவும் எனது பிரச்சினைகள் வெகுமதிகளால் தீர்க்கப்படாது எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அத்தகைய மரியாதை எனக்கு வேண்டாம் எனவும் என் சிலைகள் நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அதைத்தான் நான் கோருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பரிசீலித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிற்பி கூறியுள்ளார். முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை விமர்சித்துள்ளார் கனாய் குன்ஹிராமன். சிலையைச் சுற்றிக் கட்டப்பட்ட மற்ற சிற்பங்களும் இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் சிற்பி கனாய் குன்ஹிராமன் .