ஹேமா கமிட்டி அறிக்கை - கேரளா அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...

மலையாள திரையுலகில் ஏற்படும் பாலியல் பிரச்னை தொடர்பான அறிக்கை இருந்தும் 4 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை  - கேரளா அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...
Published on
Updated on
1 min read

சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட பல நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் கேரள உயா்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே சுமார் 170 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கேரள நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், நீதிபதி சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஹேமா கமிட்டி அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்பதில் என்ன தாமதம் என கேரள அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசு பதிலளிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்தனர். தொடர்ந்து ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும் ஹேமா கமிட்டி விவகாரத்தை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com