அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக X ( twitter) தளத்தில் ட்ரெண்டிங்கில் 4-வது இடம் பிடித்த #IndiaStandWithUdayStalin ஹேஷ்டேக்.
சென்னை தேனாம்பேட்டையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அவர், "டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி ஆகும்," என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் தனது கருத்தில் மாற்றமில்லை என தெரிவித்த அமைச்சர் உதயநிதியின் செய்தியாளர் சந்திப்பு வீடியோக்களை #IndiaStandWithUdayStalin என்ற ஹேஷ்டேக்கோடு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் X ( Twitter) தளத்தில் #IndiaStandWithUdayStalin என்ற ஹேஷ்டேக் 25K பதிவுகளோடு இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் 4-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க:உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார்!