குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில் சாலைப் பிரச்சாரம் நடத்தியுள்ளார்.
யோகியின் அதிரடி:
பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குஜராத் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகிறார்.
உ.பி.யின் காப்பி:
தற்போது குஜராத் சட்டசபை தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், கடந்த மார்ச் மாதம் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில், பாஜக அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதாக உள்ளன.
உ.பியை போன்றே..:
உத்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்கு முன் நடந்த கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உ.பி.யின் யோகி அரசு, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்க உ.பி. மீட்பு சட்டத்தை இயற்றியது.
அதைப்போலவே, குஜராத்தின் தேர்தல் வாக்குறுதியிலும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுப்பதற்கான சட்டத்தை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளார் யோகி.
உறுதியளித்த பாஜக:
குஜராத்தின் பாஜகவும் தனது தீர்மானக் கடிதத்தில் இந்த வாக்குறுதியை முக்கியமாக நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க உ.பி.யில் தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களை உடைக்க குஜராத்தில் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார் யோகி.
குஜராத்தின் காசி:
யோகி அரசு அயோத்தியில் ஸ்ரீராமரின் மிகப்பெரிய சிலையை நிறுவுவதை போன்று துவாரகாவில் துவாரகா தாழ்வாரம் கட்டப்படும் என்றும், ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயரமான சிலை நிறுவப்படும் என்றும் பாஜக உறுதியளித்துள்ளது.
அதைப் போலவே வாரணாசியில் உள்ள காசியின் வளர்ச்சியின் வழியில், குஜராத்தில் உள்ள பாவ்நகரின் சிஹோர் நகரம் காசியாக உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் யோலி ஆதித்யநாத்.
அரசியல் விமர்சகர்கள்:
அனைத்து வாக்குறுதிகளும் உ.பி.,யின் கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை ஒத்திருப்பதால் பாஜகவில் யோகியின் ஆதிக்கம் மேலோங்குகிறதா என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்திற்குள் எழுந்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-நப்பசலையார்