இத்தாலி பிரதமர் தலைமையில் புவிசார் மாநாடு...!!!

இத்தாலி பிரதமர் தலைமையில் புவிசார் மாநாடு...!!!
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தலைப்பின் கீழ்  இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றவுள்ளார்.

நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றவுள்ளார்.  இணையதளத்தில் பட்ஜெட்க்கு பின்னதான மாநாடு நடைபெறவுள்ளது.  அப்போது நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆகிய கருப்பொருள் குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இவ்வாறு ஏற்கனவே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாக வாழ்வது குறித்த தலைப்பிலும் ஏற்கனவே பிரதமர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைதொடர்ந்து டெல்லியில் நடைபெறும் புவிசார் அரசியல் மாநாட்டினை நாளை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.   இந்த உரையாடல் குறித்த மாநாடு, பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த மாநாடானது வரும் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.  மூன்று நாள் உரையாடலில் 250-க்கும் மேற்பட்ட உலகின் சிந்தனைத் தலைவர்கள் பங்கேற்று பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com