அம்பேத்கரின் கோட்டு சூட்டும்.. அதை பற்றிய காந்தியின் கணிப்பும்..!

அம்பேத்கரின் கோட்டு சூட்டும்.. அதை பற்றிய காந்தியின் கணிப்பும்..!
Published on
Updated on
1 min read

எல்லாமே அரசியல் தான்

காந்தி சட்டையை கழட்டுனதுலையும்; அம்பேத்கர் கோட்டு போட்டதுலையும் விஷயம் இருக்கு, எல்லாமே அரசியல் தான் என்று பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் நடிகர் ரஜினி சொல்லும் வசனம் இது. கழுத்து மேல ஒரு துண்டு, இடுப்பு கீழ பஞ்சகஜம் பாணில வேஷ்டி, கண்ணுல ரவுண்டு கண்ணாடி, கையில ஒரு தடி, இது தான் காந்தி என்றதும்  மக்களோட நினைவில் வரும் தோற்றம். இதுவே அம்பேத்கர் என்றவுடன் அனைவரது மனதிலும் தோன்றுவது கோட்டு, சூட்டு, பூட்ஸு, கண்ணாடியும் தான்.

அம்பேத்கர் சொன்ன காரணம்

ஒருமுறை  அம்பேத்கரிடம் நீங்கள் ஏன் எப்போதும் விலை உயர்ந்த விடுதிகளில் தங்குகிறீர்கள், அதோடு எப்பவும் மிடுக்கு உடையுடனே இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது அம்பேத்கர் சொன்ன காரணம், மேலாடைகள் மறுக்கப்பட்ட எனது மக்கள், இவ்வாறு விலையுர்ந்த விடுதிகளில் நான் தங்கினால்,  என்னை பார்க்க வரும் என் மக்களுக்கு நாமும் அம்பேத்கரைப் போன்று நல்ல ஆடைகளை அணிந்து செல்ல வேண்டுமென்ற எண்ணம் தோன்றும், அதுவே அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று பதில் அளித்தார்.

ஆடை அரசியல்

காந்தி தனது செயலர் மகாதேவ தேசாயிடம் அம்பேத்கர் பற்றி கூறியது, வட்ட மேஜை மாநாட்டிற்கு செல்லும் வரை அம்பேத்கர் ஒரு ஹரிஜன் என்று எனக்கு தெரியாது, ஏதோ ஹரிஜனர்களின் நலத்தில் ஆழ்ந்த அக்கறையுள்ள ஒரு பிராமணன் என்றே நினைத்திருந்தேன். அதனால் தான் அவர் மட்டுமீறிப் பேசுகிறார் என கருதினேன்.

காந்தியின் எண்ணம்

ஆப்ரிக்க ஸூலுக்களின் உடல் அழகை வியந்து எழுதிய காந்தி, ஒருவரின் உடலை வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது எவ்வளவு அபத்தம் என்றவர் காந்தி. ஆனால் அவரே அம்பேத்கரின் மிடுக்கான உடையையும், கம்பீரமான உடல்தோற்றத்தையும் கண்டு இவ்வாறு இருந்தால் அவர் பிராமணராக தான் இருக்க கூடும் என்ற எண்ணம் காந்திக்கு தோன்றியது எவ்வளவு அபத்தமான ஒன்று.

- அறிவுமதி அன்பரசன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com