உக்ரைன் அமைதி தொடர்பாக ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் - பிரதமர் மோடி!

உக்ரைன் அமைதி தொடர்பாக ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் - பிரதமர் மோடி!
Published on
Updated on
1 min read

உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் என டெல்லியில் ஜெர்மனி அதிபருடன் பிரதமர் மோடி கூட்டாக பேட்டியளித்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் -க்கு பிரம்மாண்ட ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்ற நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இருவரும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓலாஃப், இந்தியா மகத்தான வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் இந்தியாவில் ஏராளமான திறமைசாளிகள் உள்ளதாகவும், ஜெர்மனி நிறுவனங்கள் அவர்களை ஈர்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளும் ஆழமான புரிதலுடன் வர்த்தக பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக ஜெர்மனி இருப்பதாகவும் கூறினார். மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com