உடல்நலக்குறைவால் உயிாிழந்த கேரள முன்னாள் முதலமைச்சா் உம்மன்சாண்டியின் உடல் அடக்கம் நாளை நடைபெறவுள்ளது.
கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி(79), உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 4.25 அளவில் காலமானார்.
அதனைத் தொடர்ந்து, அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தலைமை செயலக தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் நாளை பிற்பகல் 2 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமா் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல் தொிவித்துள்ளனா்.
இதையும் படிக்க || நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடா்!