தாம்பரம் - சம்பல்பூர் இடையே கூடுதல் ரயில்: விவரங்கள் உள்ளே!

தாம்பரம் - சம்பல்பூர் இடையே கூடுதல் ரயில்: விவரங்கள் உள்ளே!
Published on
Updated on
1 min read

பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதை குறைப்பதற்காக, தாம்பரம் - சம்பல்பூர் இடையே கூடுதல் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் பயணத்திற்கு, ரயில்களையே நம்பியுள்ளனர். ஆனால், தற்போது, ரயில்களில் கூட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பயணிகள், நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் கூட நெரிசலில் சிக்கி தவிப்பதை காண முடிகிறது. இந்நிலையை சரி செய்வதற்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே, ட்விட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளது. அந்த பதிவில், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க  இன்று தாம்பரம் மற்றும் சம்பல்பூர் இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது எனவும், நேரங்கள் மற்றும் பயண நிறுத்தங்கள் கூடிய விரிவான தகவல் விரைவில் பகிரப்படும் எனவும் தெற்கு ரயில்வே தொிவித்துள்ளது. 

இன்று (22.06.2023) இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சம்பல்பூர் புறப்படும் பயணிகள் ரெயில், மறுமார்க்கமாக வரும் 24-ம் தேதி சம்பல்பூரில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது. 

இதில் 13 பொதுப்பெட்டிகள், 3 இருக்கை வசதி பெட்டிகள், 1 லக்கேஜ் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com