தேர்தல் விதிமீறல்கள்.... பாஜக மீது முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!!!

தேர்தல் விதிமீறல்கள்.... பாஜக மீது முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!!!
Published on
Updated on
1 min read

60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 20 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திரிபுரா முன்னாள் முதலமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாணிக் சர்க்கார் பாஜக மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.   அதாவது, “சில இடங்களில் பாஜகவைச் சேர்ந்த சமூக விரோதிகள் பிரச்னையை உருவாக்கி மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விடாமல் தடுத்து வருகின்றனர்.  ஆனால், பொதுமக்கள் வாக்களிக்க முயற்சி செய்து வருகின்றனர்.  சில இடங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.  வாக்களிக்க அனுமதிக்காவிட்டால், மற்றவர்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம்.” எனக் கூறி சாலை மறியல் செய்து, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  

பாஜகவின் செயலானது மிகவும் அபத்தமானது எனவும் இது போன்ற செயல்களை நிச்சயமாக த்டுப்போம் எனவும் இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை வேண்டும் எனக்க் கூறி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com