ஏப்ரல் 1 முதல்... உயரும் சுங்க கட்டணம்...!!!

ஏப்ரல் 1 முதல்... உயரும் சுங்க கட்டணம்...!!!
Published on
Updated on
1 min read

கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது.  அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்ரல்1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கசாவடிகள்:

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.  மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிக்கத் தேசிய நெடுஞ்சாலை தான் பாதுகாப்பான, விரைவான பயணத்தைச் செய்ய உதவுகிறது.  ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்று என அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டண உயர்வு:

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.  சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு நிர்வகித்து வருகிறது.  இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.  

அதன்படி வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1 முதல்:

இதற்கான ஆவணப் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது.  கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது.  அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்ரல்1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com