இந்தியாவில் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம்..!

கூடுதல் கட்டுபாடுகளை விதிக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்..!
இந்தியாவில் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம்..!
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று  கணிசமாக கட்டுக்குள் உள்ளது. எனினும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இதற்கிடையில், ஒமிக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிக அளவில் கொரோனா தொற்று பரவும் பகுதிகளில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு, மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com