தனிப்பெருமையுடன் ஆட்சியமைக்கவுள்ள காங்கிரஸ்....!!!

தனிப்பெருமையுடன் ஆட்சியமைக்கவுள்ள காங்கிரஸ்....!!!
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ், தனிப்பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது.

224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் 36 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.  ஆரம்பத்தில் பாஜக வெற்றி முகத்தில் இருப்பதுபோல் தோன்றிய நிலையில், 136 தொகுதிகளில் காங்கிரசும், 62 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி  முன்னிலை வகித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.  ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை  என்ற நிலையில், 136 தொகுதிகளைத் தாண்டி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூரிலும்,  வெற்றி பெற்றுளளனர். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி  பெற்ற நிலையில்  58 தொகுதிகளில் பாஜகவினர் வெற்றி முகத்தில் உள்ளனர்.  இதனிடையே காங்கிரஸ் வெற்றியை நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் காங்கிரசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வெற்றிமுகம் காணும் காங்கிரஸ் வேட்பாளர்கள், பெங்களூரு வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. வெற்றி பெறும் எம்எல்ஏக்களை, தமிழ்நாடு அழைத்து வந்து பாதுகாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவில் நாளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com