இந்திய ஒற்றுமை பயணத்தின் பதினைந்தாவது நாள் நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து மௌனம் கலைத்துள்ளார் ராகுல். ”நான் எனது பழைய நிலைப்பாட்டில்தான் நிற்கிறேன். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின் அவமானகரமான தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் பதவியேற்றால், அவர் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று ராகுல்
காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி 'ஒன் மேன் ஒன் போஸ்ட்'க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது ”ஒரு நபர் ஒரு பதவி” என்ற காங்கிரஸின் கொள்கைக்கு விருப்பம் கூறியுள்ளார். உதய்பூரின் சிந்தன் சிவூரில் காங்கிரஸ் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வழங்க ராகுல் விரும்பவில்லை.
காங்கிரஸின் புதிய தலைவருக்கு ராகுல் காந்தி ஏற்கனவே அறிவுரை வழங்கியிருந்தாலும் , நடைபெற உள்ள காங்கிரஸ் தலைவருக்கு தேர்தல் குறித்தும் ராகுல் ஆலோசனை வழங்கியுள்ளார். ”காங்கிரஸ் தலைவர் என்பது வெறும் நிறுவன பதவி மட்டுமல்ல, அது ஒரு நம்பிக்கை” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ”காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பெறுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தலைவராக இருப்பவர் இந்தியாவின் கருத்துக்கள், நம்பிக்கை அமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா விசாரணையும் கைதும் ஆலோசனையும்!!!