ராஷ்டிரபத்னி-மன்னிப்பு கடிதம் எழுதினார் சவுத்ரி

ராஷ்டிரபத்னி-மன்னிப்பு கடிதம் எழுதினார் சவுத்ரி
Published on
Updated on
1 min read

பதவியை விவரிக்க பொருத்தமற்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோரி மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஷ்டிரபத்னி:

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை "ராஷ்டிரபத்னி" என்று வர்ணித்ததன் மூலம் அவரையும் அவரது கட்சியினரையும்  சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார் சவுத்ரி.  இதற்காக சோனியா காந்தியும் சவுத்ரியும் நாடாளுமன்றத்திலும் தெருக்களிலும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் எதிர்கட்சியினர் முழக்கமிட்டனர்.

மன்னிப்பு கடிதம்:

நீங்கள் வகிக்கும் பதவியை விவரிக்க தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தவறுதலாக அந்த வார்த்தையை பயன்படுத்தியதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று சவுத்ரி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com