இந்தியாவில் மகாராஷ்ட்ரா, ஒடிசா, பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போதே சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டுமெனக் கூறி வருகின்றன. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கிடப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக்குழு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது. இக்குழுவில் அம்மாநில முதலமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவர் ஜேதஸ்வி யாதவும் இடம்பெற்றுள்ளார்.