ராஜஸ்தானில் முத்திரைத் தாள் மூலம் சிறுமிகள் ஏலம்...பாஜக ஆட்சியில் தான் நடந்தது? - அசோக் கெலாட் குற்றச்சாட்டு!

ராஜஸ்தானில் முத்திரைத் தாள் மூலம் சிறுமிகள் ஏலம்...பாஜக ஆட்சியில் தான் நடந்தது? - அசோக் கெலாட் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

பாஜக ஆட்சியின் போதே ராஜஸ்தான் சிறுமிகள் ஏலம் விடப்பட்ட நிகழ்வு அரங்கேறியதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

சிறுமிகள் ஏலம்:

ராஜஸ்தானில் 6க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகளை சாதிப் பஞ்சாயத்துகள் அணுகுவதாக கூறப்படுகிறது. அப்படி அணுகும்போது, பில்வாரா பகுதியில் கடனை அடைக்க முடியாத குடும்பத்தினர் 8 முதல் 18 வயதுடைய தங்கள் மகளை முத்திரைத் தாள் மூலம் ஏலம் விடுவதாக செய்தி வெளியானது. 

அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையெனில், சிறுமியின் தாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அந்த வகையில், ஒரு சிறுமி 6 லட்ச ரூபாய் கடனுக்காக 3 முறை ஏலம் விடப்பட்டு 4 முறை கர்ப்பமானதும் தெரிய வந்தது.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்:

இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க ராஜஸ்தான் அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அகோச் கெலாட் குற்றச்சாட்டு:

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதிலளித்துள்ளார். அதாவது கடந்த 2005ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது இச்சம்பவம் நடந்ததாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோன்று, 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் இச்சம்பவம் தொடர்பாக 3 குழந்தைகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டதாகவும், 21 பேரை கைது செய்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com