மத்திய அரசால் மிரட்டப்படுகின்றனரா நீதிபதிகள்...முன்னாள் நீதிபதி கூறியதென்ன?!!

ஒரு நீதிபதி அதன் விருப்பத்தின் படி பணியாற்ற மாட்டார் என்று அரசு கருதும் போது, ​​அத்தகைய நீதிபதியை உயர் பதவியில் நியமிக்க அனுமதிப்பதில்லை. 
மத்திய அரசால் மிரட்டப்படுகின்றனரா நீதிபதிகள்...முன்னாள் நீதிபதி கூறியதென்ன?!!
Published on
Updated on
1 min read

நீதிபதிகளின் பலவீனங்களைக் கண்டறியவும், அவர்களை அச்சுறுத்தவும் புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்.  

கைப்பற்றும் முயற்சி:

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சோசலிஸ்ட் தலைவர் பாபுசாகேப் கல்தாடே நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசியபோது ”நாட்டில் அரசியலமைப்பின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

விருப்பத்தின் படி பணியாற்றாவிட்டால்:

மேலும் ஒரு நீதிபதி அவர்களின் விருப்பத்தின் படி பணியாற்ற மாட்டார் என்று அரசு கருதும் போது, ​​அத்தகைய நீதிபதியை உயர் பதவியில் நியமிக்க அனுமதிப்பதில்லை என்று பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.  

தொடர்ந்து பேசிய அவர் ஓய்வு பெற்ற பிறகு கமிஷன்கள் அல்லது பிற அமைப்புகளில் நியமனம் செய்வதன் மூலம் நீதிபதிகளின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு முன்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் தற்போதைய அரசு புதிய அணுகுமுறையை கையாண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மிரட்டப்படுவார்கள்:

தற்போது அனைத்து நீதிபதிகளின் கோப்புகளும் தயார் செய்யப்பட்டு உளவுத்துறை அமைப்பு, வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம் போன்ற புலனாய்வு அமைப்புகளின் மூலம் நீதிபதிகள் அல்லது அவர்களது உறவினர்களின் பலவீனங்களைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும் அவர்களின் பலவீனம் வெளிச்சத்திற்கு வந்தால், அந்த நீதிபதியை மிரட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com