பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசே...!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசே...!!
Published on
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். 

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் காமராஜ், நிலக்கரி எடுப்பதற்கு ஓராண்டாக நடைபெறும் டெண்டர் நடவடிக்கை தி.மு.க. அரசுக்கு தெரியாமல் போனது எப்படி என கேள்வி எழுப்பினர். 

நேற்று நாடாளுமன்றத்தில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திலும் இதைக் குறித்து பேசியுள்ளார்.  அதாவது பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு என்றும் எனவே மத்திய அரசு அறிவித்துள்ள நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com