ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் கெஜ்ரிவால், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையை மற்ற எம்.எல்.ஏ.-க்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் அதிஷி அடுத்த முதல்வராக பதவி ஏற்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே தொடங்கிய போராட்டத்தில் பங்கேற்ற அதிஷி. அதன் தொடர்ச்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியில் இணைத்து பயணித்தார்.ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் கட்டமைப்பதில் முக்கிய பங்காட்டியுள்ளார் அதிஷி. அதன் பிறகு 2019 மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.2020 ஆம் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிஷிக்கு அமைச்சரவையில் இடமானது வழங்கப்பட்டது.
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால்,மனிஷ் சிசோடிய கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலக்கட்டத்தில் ஆட்சியையும்,கட்சியையும் வழிநடத்தியவர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.