”பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நமது தாய் மற்றும் சகோதரிகள்....” பிரதமர் மோடி!!!

”பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நமது தாய் மற்றும் சகோதரிகள்....” பிரதமர் மோடி!!!
Published on
Updated on
1 min read

டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் 27 வரை 'ஆதி மஹோத்சவ்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டம் 200 ஸ்டால்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை காட்சிப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. 

ஆதி மஹோத்சவ்:

டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் ‘ஆதி மஹோத்சவ்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.   இந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா உடனிருந்தார்.  சுதந்திர போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான பிர்சா முண்டாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.  இந்நிகழ்வில் பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.  

பாரம்பரியம் மரபுகள்:

”பழங்குடியினரின் வாழ்க்கை முறை எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.  நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பழங்குடி சமூக மக்களுடன் பல வாரங்கள் செலவிட்டுள்ளேன்.  உங்கள் மரபுகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.  உங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டு அதைப் போலவே வாழ்ந்தேன்.  பழங்குடியினரின் வாழ்க்கை முறை நாட்டின் பாரம்பரியம் மற்றும் மரபுகள் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இயற்கை பாதுகாப்பு:

”இயற்கை வளங்களை பெறுவதன் மூலம் இயற்கையை பாதுகாக்க முடியும்.  இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இன்று, 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்கள் வெவ்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.  இதில் 1.25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நமது தாய் மற்றும் சகோதரிகள்.” எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com