5ஜி மாற்றம்...ஓ.டி.பி எண் கொடுக்க வேண்டாம் என சைபர் க்ரைம் எச்சரிக்கை!

5ஜி மாற்றம்...ஓ.டி.பி எண் கொடுக்க வேண்டாம் என சைபர் க்ரைம் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

சிம் கார்டை 4 ஜியில் இருந்து 5ஜிக்கு அப்டேட் செய்வதாக கூறி யாராவது ஓ.டி.பி எண்ணை கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

நாட்டில் 5ஜி சேவை முதற்கட்டமாக 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல நகரங்களுக்கு அடுத்தடுத்து விரிவாக்கப்பட உள்ள சூழ்நிலையில் இந்த சேவையை குறி வைத்து ஆங்காங்கே சைபர் குற்றங்களும் தலை தூக்கியுள்ளது.

தற்போது 4ஜி செல்போன் சேவையை 5ஜி சேவைக்கு மாற்றி தருகிறோம் என்று கூறி ஒ.டி.பி கடவுச்சொல் எண்ணை கொடுங்கள் என மர்மநபர்கள் மூலம் அழைப்புகள் வரத் துவங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் 5ஜி சேவைக்கு மாற்றி தருகின்றோம் என யாராவது ஓ.டி.பி எண்ணை கேட்டால் தரவேண்டாம் எனவும், அவ்வாறு கொடுத்தால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்ர் எச்சரித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com