வேட்புமனு திரும்பப் பெற 50 லட்சம்...! பாஜக அமைச்சர் மீது வழக்கு...!!

வேட்புமனு திரும்பப் பெற 50 லட்சம்...! பாஜக அமைச்சர் மீது வழக்கு...!!
Published on
Updated on
1 min read

மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் மனு வாபஸ் பெற 50 லட்சம் பணம் கொடுப்பதாக பேரம் பேசிய பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் மாநில வீட்டு வசதி அமைச்சராக இருக்கும் சோமண்ணா வருணா, சாம்ராஜ்நகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் சாம்ராஜ்நகர் தொகுதியில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமியிடம் வேட்பு மனுவை திரும்ப பெற்றும் படி  பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த ஆடியோவில் வாபஸ் மனு திரும்பப் பெற சுமார் 50 லட்சம் ரூபாய்  தருவதாக கூறப்பட்டது. அது மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் அரசியல் பதவிகள் தரப்படும் எனவும் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் புகார் மனு அளித்த நிலையில் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி அமைச்சர் சோமண்ணா அவரது ஆதரவாளர்கள் நடராஜ், சுதீப் ஆகியோர் மீது சாம்ராஜ்நகர் டவுன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் களத்தில் லஞ்சம் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 (E) and 171 (F) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com