இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக் குழு தொிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு நாட்டில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யு ஜி சி செயலாலர் மணிஷ் ஜோஷி கூறுகையில், "பல்கலைக்குழு மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளாமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யுஜிசி-க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படாது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், குறிப்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், தர்யகாஞ்சில் உள்ள கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் போலியான பல்கலைக்கழகங்கள் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.