ஆந்திராவின் சாதனையை முறியடித்த மத்திய பிரதேசம்... ஒரே நாளில் 16 லட்சம் தடுப்பூசி...

மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 16 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு ஆந்திராவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் சாதனையை முறியடித்த மத்திய பிரதேசம்... ஒரே நாளில் 16 லட்சம் தடுப்பூசி...
Published on
Updated on
1 min read
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அவைவருக்கு தடுப்பூசியானது செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் புதிய கொள்கை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே மத்திய பிரதேசம் முழுவதும் 52 மாவட்டங்களில் மொத்த 7 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு 10 லட்சம் டோஸ்கள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 16.41 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
புதிய கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட 80 லட்சம் தடுப்பூசி டோஸ்களில் 20 சதவீதம் அதாவது 16 லட்சம் மத்திய பிரதேசத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆந்திராவில் ஒரே நாளில் 13லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனை மத்திய பிரதேசத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com