விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி இருக்கும்..? படம்பிடித்துக் காட்டியது ’ பிரக்யான்’ ...!

விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி இருக்கும்..? படம்பிடித்துக் காட்டியது ’ பிரக்யான்’ ...!
Published on
Updated on
2 min read

நிலவில் தரையிறங்கியதற்கு பின்னர், முதன் முதலில்  விக்ரம் லேண்டரை படம்பிடித்து அனுப்பியுள்ளது பிரக்யான் ரோவர். 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல்நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.

இதையடுத்து லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அசோகச்சக்கரம் மற்றும் இஸ்ரோவின் சின்னங்கள் கொண்ட ரோவர், நிலவில் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரிய ஒளியே படாத அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதன் மூலம் மனிதகுல தோற்றம், விண்வெளி ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறிருக்க சந்திரயான்-3 விண்கல திட்டம் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகிறது. கடந்த 23-ந் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. 

அதில் இருந்து பிரக்யான் ரோவர் சுமார் ஆறு மணி நேரம் கழித்து நிலவில் கால் பதித்தது. அதன்பின் மெல்ல மெல்ல ஊர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வருகிறது. ஒரு பெரிய பள்ளத்தை கண்டறிந்து தனது பாதையை மாற்றியது.

இந்த நிலையில் இன்று பிரக்யான் ரோவர், ஆய்வு செய்து கொண்டே, விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. நேவிகேசன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆய்வை மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. 

இதுவரை விக்ரம் லேண்டர் ரோவரை படம்பிடித்து அனுப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே.. ஆனால், ரோவர் விக்ரம் லேண்டரை நிலவில் வைத்து படம்பிடித்து இதுவரை அனுப்பியதில்ல்லை. இன்று காலை அந்த அற்புத தருணமும் நிகழ்ந்தது. இன்று காலை நிலவிலிருந்து ரோவர்  விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது . அந்த புகைப்படங்களை இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்  அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது. 

இப்படியிருக்க,  நிலவின்  மேற்பரப்பில் தொடர்ந்து ஊர்ந்து சென்று ஆய்வு செய்து வரும்  பிரக்யான் ரோவர் விண்கலம், தற்போது தனது முக்கியமான இலக்கில்  தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, நிலவில் தென்துருவத்தில் சில வகையான கந்தகங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்திருக்கிறது.  

ரோவரில் இருக்கும் 'லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்'  எனப்படும் அளவீட்டு கருவியின் துணையோடு நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது. 

அந்தவகையில், அலுமினியம், கால்சியம், இரும்பு,  குரோமியம், டைட்டானியம், மேங்கனீசு, சிலிக்கான், ஆக்சிஜென்  உள்ளிட்ட தனிமங்கள்  தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலவின் மேற்பரப்பில் இருக்கின்றன என நாம் அனைவரும் எதிர்பார்த்த படியே கண்டு சொல்லியிருக்கிறது. ஆனால்,  ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதற்கான தேடல் பணிகளில் ரோவர் ஈடுபட்டுள்ளது என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

தொழிநுட்பத்திலும் அறிவியல் அறிவிலும் வளர்ந்த  பல  நாடுகள் எத்தனையோ முயற்சித்தும் எட்டாத ஒரு அற்புதமான சாதனையை நமது சந்திராயன் - 3 திட்டம் மூலமாக ஒஸ்ரோ நிறுவனம் நிகழ்த்திக்காட்டியிருப்பது மிகவும் பெருமையான உணர்வாகும். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com