அமெரிக்காவில் மூழ்கிய கப்பலில் இருந்து 500 தங்க காசுகளை கண்டுபிடித்து தந்தவரை 6 ஆண்டு காலமாக சிறையில் அடைத்து வருகின்றனர்.
1988ம் ஆண்டு எஸ் எஸ் சென்ட்ரல் அமெரிக்கா என்ற கப்பல் தங்கங்களுடன் கடலில் சென்ற போது புயல் காற்றால் கப்பல் கடலில் முழ்கியது. அதில் இருந்த தங்கங்களும் கடலில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது. 1587ம் ஆண்டு ஒரு கப்பல் அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடல் பகுதியில் முழ்கியது. இந்த இரண்டு கப்பல்களும் ஏராளமான தங்கங்களுடன் கடலில் முழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாம்மி தாம்ஸன் என்பவர் இந்த முழ்கிய கப்பல்கள் குறித்து ஆய்வு செய்து வந்துள்ளார்.
இவர் ஆழ்கடலில் முழ்கி ஆய்வு செய்வதில் வல்லவராவார்.இவர் கடந்த 2015ம் ஆண்டின் ஆய்வின் போது சுமார் 500 தங்க காசுகள் கடலுக்குள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த செய்திபரவியதும், இவரை அமெரிக்க போலீசார் கைது செய்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரித்தனர்.
அவர் தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் தங்கம் இருக்கும் இடத்தை சொல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது .உடனடியாக போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அவரை அழைத்து சென்று அடையாளம் காட்டும்படி நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்தது. ஆனால் அவர் அடையாளம் காட்ட மறுத்துவிட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை தண்டனையும் நாள் ஒன்றிற்கு 1000 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
2015ம் ஆண்டு இந்த வழக்கு நடந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகளாகியும் அவர் சிறையிலேயே இருக்கிறார். தங்கம் இருக்கும் இடத்தை சொல்ல தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். அமெரிக்க சட்டப்படி கோர்ட் அவமதிப்பிற்கு 18 மாதங்கள் மட்டுமே தண்டனை, அதையும் தாண்டி தன்னை சிறையில் வைத்திருப்பதாக இவர் தற்போது தன்னை விடுதலை செய்யும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது கவனம் பெற்றுள்ளது. சுமார் 500 தங்க காசுகள் கொண்ட ஒரு புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த இவரை வெளியில் விட்டால் அந்த புதையலை எடுத்துக்கொள்வார் அரசிற்கு அந்த புதையல் கிடைக்காது என்பதால் இவரை வெளியில் விட போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.