”நல்ல பெண் தேவை “ ரோட்டில் விளம்பர பலகை வைத்த முதியவர்!!

வயதான முதியவர்  ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியாக கொண்டாட விருப்பம் இல்லாததால் பெண் தேவை என விளம்பரம் செய்தது பார்ப்போரை வியக்க செய்து வருகிறது...
”நல்ல பெண் தேவை “ ரோட்டில் விளம்பர பலகை வைத்த முதியவர்!!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் 66 வயதான முதியவர் ஒருவர் 50 முதல் 55 வயதில் பெண் வேண்டும் என பெரிய அளவிலான விளம்பர பலகையை வைத்துள்ளது பார்போர்களை கவர்ந்து வருகிறது. இவர் தற்போது வரவிருக்கும் கிரிஸ்துமஸ் பண்டிகையை தனியாக கொண்டாட விரும்பாத நிலையில் இப்படிப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

கான்ட்ராக்டரும் உடற்பயிற்சி ஆர்வலருமான ஜிம் பேஸ் (66)  உலகின் மிகவும் சுதந்திரமான இடத்திற்கு குடிபெயெர நினைத்த இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெக்சாசுக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படுகிறது.இவர் இரண்டு முரை விவாகரத்து பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தை ஆவார்.கடந்த ஜூன் மாதம் இவரது தொழிலை லோன் ஸ்டார் ஸ்டேட்டிற்கு மாற்றியுள்ளார்.இந்த சூழலில் தனிமை இவரை வாட்டி எடுத்ததாக சொல்லப்படுகிறது.இதனால் தனது மீதமுள்ள வாழ் நாளிற்காக ஒரு பெண்ணை தேடிய வண்ணம் இருந்துள்ளார்.

இதனிடையே கிரிஸ்துமஸ் விழா வரும் நிலையில் தனியாக இருக்கும் இவர் அதனை ஒரு பெண்ணோடு கொண்டாட முடிவு செய்து நெடுஞ்சாலை ஒன்றில் நல்ல பெண் வேண்டும் என பேனர் வைத்துள்ளார்.அந்த விளம்பரத்தில் மேலும் 50-55 வயதுடைய பெண் பேசுவதற்கு மற்றும் பரஸ்பர அன்பான செயல்களுக்கு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

விளம்பரப் பலகை வைக்கப்பட்டதிலிருந்து, ஜிம் பேஸ்-க்கு நான்கைந்து நாட்களாக பலர் குரல் வழியாக குருஞ்செய்தி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com