செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் போதிய அரசு பேருந்து இல்லாத காரணத்தால் இடம் பிடிப்பதற்காக மாணவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் 2 மணி முதல் 4 மணி வரை இரு பிரிவுகளாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. கல்லூரி வளாகம் முன்பு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் விசாரணை செய்த போது போதிய அரசு பேருந்து இல்லாத காரணத்தால் மாணவர்கள் பேருந்து வரும்போது இருக்கையில் அமருவதற்கு இடம் பிடிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு ஏறியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர் என்று விசாரணையில் தெரியவந்தது.
போதிய அரசு பேருந்து இயக்காத காரணத்தால் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.