டிக்கெட் வாங்குனா...பாப்கானும் வாங்கனும்...தியேட்டரில் கட்டாயம்...!

டிக்கெட் வாங்குனா...பாப்கானும் வாங்கனும்...தியேட்டரில் கட்டாயம்...!
Published on
Updated on
1 min read

சேலத்தில் டிக்கெட்டுடன் பாப்கான் வாங்குமாறு கட்டாயப்படுத்திய ARRS தியேட்டர்க்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 

பாப்கான் வாங்க சொல்லி கட்டாயம்:

சேலத்தைச் சேர்ந்த மோனிஷ் குமார் என்பவர், ஆன்லைன் மூலம் 15 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துவைத்துள்ளார். அதன்படி, மோனிஷ் குமார் அவரது குடும்பத்துடன் இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல திரையரங்கிற்கு ”பொன்னியின் செல்வன்” படம் பார்க்கச் சென்றுள்ளார்.

வைரலான வீடியோ:

அப்போது, டிக்கெட் கவுண்டரில் இருந்த திரையரங்கு ஊழியர்கள் 15 டிக்கெட்டுக்கு 15 பாப்கான் வாங்க வேண்டும் என்று மோனிஷ் குமாரின் குடும்பத்தினரிடம் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

நோட்டீஸ் அனுப்பிய உணவு பாதுகாப்பு துறை:

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்குக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சினிமா டிக்கெட் உடன் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, அது குறித்து விளக்கம் கேட்டு திரையரங்கு நிர்வாகிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com