மத்திய பிரதேச மாநிலமான போபாலில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.கடந்த ஆண்டு 7 வயதான சிறுமி ஒருவர் தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருக்கையில் நாய்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுமியை கடித்து குதறியதாக சொல்லப்படுகிறது.அதில் அவர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால் நாய்களை பற்றிய ஆய்வு ஒன்று தொடரப்பட்டது.மேலும் அந்த ஆய்வின் முடிவில் ஒரு லட்சத்துக்கும் மேலகா இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்த நிலையில் அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் போபாலில் நான்கு வயதான சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே விளையாடிய பொழுதில் அப்பகுதியில் உள்ள நாய்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சிறுமியை பார்த்து திடீரென குரைக்க ஆரம்பித்துள்ளது.இதற்கு பயந்த சிறுமி தெருவில் ஓட ஆரம்பித்துள்ளார்.இதனை தொடர்ந்து நாய்கள் ஒன்றுகூடி சிறுமியை கடித்து குதறியது.
இதில் பயத்தில் ஓடிக்கொண்டிருந்த சிறுமியானவள் கீழே விழுந்துள்ளார்.உடனே நாய்கல் அனைத்தும் சிறுமியை ஒன்றுகூடி கடித்து குதற ஆரம்பித்துள்ளது.இதனை அந்த வழியே சென்ற நபர் ஒருவர் பார்க்கையில் நாய்களை விரட்டியபடி சிறுமியையும் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.