பொதுவாக தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி கூறுவார்கள். ஆனால், அதை மாற்றி அமைக்கும் விதமாக இந்த மழலைகளின் வீடியோ அமைந்துள்ளது.
இந்த வீடியோவில், மழை பெய்து சாலை ஓரத்தில் சிறிதளவு நீர் ஓடுகிறது. சாலையின் ஓரத்தில் உள்ள வீட்டு வாசலுக்கு அண்ணன், தம்பி, தங்கை என 3 மழலை செல்வங்கள் மழை நீரை கடந்து செல்ல முயற்சித்துள்ளனர்.
ஆனால், தம்பியும் தங்கையும் கடந்து செல்ல முடியாமல் சாலையோரத்தில், நீர் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இருந்தனர். இதனைகவனித்த மூத்த அண்ணன், தனது தம்பி தங்கையை முதுகில் தூக்கிக்கொண்டு அந்த வீட்டு வாசலில் பத்திரமாக கொண்டு இறக்கி விடுகிறார்.
இந்த பாசமிகு மழலை செல்வங்களின் கியூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த் நந்தா ஐ.எப்.எஸ் ’அண்ணன் வேண்டும் என்பது இதற்காக தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.