மனிதர்களே உதவி செய்ய யோசிக்கும் உலகத்தில், இந்து அறிவு ஜீவன்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்வது மனிதர்களுக்கு ஒரு பாடம்.
”முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு’ என்ற குறளுக்கு எடுத்துகாட்டாக இந்த எருமையின் வீடியோ அமைந்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி, சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், எருமை மாடு ஒன்று தன் தலையை கீழே முட்டிக்கொண்டு இருப்பது போன்று முதலில் தெரிகிறது. அத கூர்ந்து பாரத்த பிறகுதான் அங்கு தலைகுப்புற கிடக்கும் ஆமை ஒன்றுக்கு உதவி செய்வது தெரிய வந்தது.
தலைக்குப்புற கவிழ்ந்து எழமுடியாமல் தவித்த ஆமையை, தனது கொம்பினால் தூக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. சில முயற்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக தன் கொம்பால் ஆமையை திருப்பியது.
ஆமையை கொம்பினால் திருப்பிய அந்த எருமையின் கம்பீர நடை பார்ப்பதற்கு ”சிங்கம் ஒன்று புறப்பட்டது” என்ற பாடலுக்கு ஏற்றவாறு ”எருமை ஒன்று புறப்பட்டது” என்பது போல அப்படி ஒரு கம்பீர நடையாக இருந்தது. அந்த ஆமை மட்டும் பேசினால் “என் நண்பேன்டா” என்று கூறி இருக்கும் போல.
ஆமைக்கு ஆபத்து நேரத்தில் உதவி செய்த எமையின் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.