ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகளவில் கோடிக்கணக்கான மனிதர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்று, விலங்குகளுக்கும் பரவியது. ஆனால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக அறிவியல் சான்றுகள் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் தான், ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தங்களுடைய செல்ல பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள, அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகளவில் மனிதர்களுக்கே தடுப்பூசி போட்டு முடிக்காத நிலையில், ரஷ்யாவின் இந்த செய்கையை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சில மருத்துவர்கள், குட்டியிலேயே முறையே தடுப்பூசி போடப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும், இதனால் செல்லப்பிராணிகளை வைத்திருப்போர் அச்சமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.