5-கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் தரமற்ற பேருந்து நிலையம்!!

5-கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் தரமற்ற பேருந்து நிலையம்!!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே பேருந்து கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் கட்டபடுவதாக கூறி வெளியிட்ட வீடியோ சமூக வளைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையான நகராட்சியில் குளச்சல் நகராட்சியும் ஒன்று இந்த நகராட்சி அலுவலகத்தின் அருகாமையிலேயே குளச்சல் பேருந்து நிலையமும் அமைந்துள்ளது.

இந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு 5-கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பேருந்து நிலைய கட்டிட வரைபடம் மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவுகள் குறித்த "லே அவுட்" கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பொது வெளியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாததால் கட்டுமானத்தின் தரம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர், குளச்சல் பேருந்து நிலைய கட்டுமானத்தில் தரமற்ற கம்பிகள் பயன்படுத்தப்படுவதாகவும், முதற்கட்ட பணியிலேயே ஒப்பந்ததாரர் தரமற்ற கம்பிகளை பயன்படுத்தினால் கட்டிடத்தின் உறுதி தன்மை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பியம், அதிகாரிகள் இந்த வேலையை நிறுத்தி ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இது குறித்து குளச்சல் நகராட்சி பொறியாளர் ஜெயந்தி ஐ தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது பதிலளிக்க மறுத்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com