திரிபுராவில் உள்ள தலாய் மாவட்டத்தில் பாபிராம் ரியாங் என்ற 38 வயதான நபர் அப்பகுதியில் தனது குழந்தை மனைவியோடு வசித்து வந்த நிலையில் அவரது மனைவி குழுந்தையோடு உறவின்ர் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மனைவி மகனின் உடல் நிலை சரியில்லாதது குறித்து பாபிராமிடம் கூறுகையில் அவர் உடனடியாக உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
இதன்பின் அப்பகுதியில் சம்பவத்தன்று பத்து பேர் மது அருந்தி வந்த நிலையில் இருந்துள்ளனர்.இதில் கலந்து கொண்டதாக கூறுகின்றனர்.அதில் மது போதையில் ஆசிட்டிற்கும் மதுவிற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு மது அருந்தியுள்ளனர்.மதுபோதையில் மது என நினைத்து மூன்று பேர் ஆசிட்டை குடித்து இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் சச்சீந்திரா ரியாங், ஆதிராம் ரியாங், மற்றும் பாபிராம் ரியாங் என அடையாளம் காணப்பட்ட நிலையில் உறுதி செய்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரனை மேற்கொண்ட நிலையில் ரப்பர் வீடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை மூவரும் மது என நினைத்து அருந்தியுள்ளனர் என தெரிவித்தனர்.இதனை தொடந்து ஆசிட் குடித்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்த நிலையிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்டுகிறது.