சில வாரங்களாகவே வெளுத்து வாங்கிய கனமழை...சேதமடைந்த நெற்பயிர்கள்...கவலையில் விவசாயிகள்!

சில வாரங்களாகவே வெளுத்து வாங்கிய கனமழை...சேதமடைந்த நெற்பயிர்கள்...கவலையில் விவசாயிகள்!
Published on
Updated on
1 min read

பஞ்சாப்பில் கனமழை காரணமாக மூன்று லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வடமாநிலங்களில் 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே ஜூலை 19ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்பில் கனமழை காரணமாக மூன்று லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com