நிலவில் பறந்து மீண்டும் சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், மனிதன் சென்று திரும்பும் வகையிலான சோதனை மேற்கொள்ளப்பட்டதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு இஸ்ரோ பெற்றுத் தந்தது. தொடர்ந்து லேண்டரில் இருந்து நிலவில் தரையிரங்கிய ரோவர், வெப்பநிலைத் தகவல்களை வழங்கியதோடு சல்பர் உள்ளிட்ட தனிமங்களின் இருப்பையும் உறுதி செய்தது.
இந்நிலையில் 40 சென்டிமீட்டருக்கு லேண்டர் உயர்த்தப்பட்டு, 30 முதல் 40 சென்டிமீட்டர் தொலைவில் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து ராம்ப் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் முறையாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையானது மனிதர்களை நிலவுக்கு அனுப்பி திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை அக்டோபரில் இஸ்ரோ மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த சோதனை முக்கிய முன்னேற்றமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Chandrayaan-3 Mission: