துபாய் சென்ற விமானத்தில் திடீர் தொழில் நுட்ப கோளாறு!

துபாய் சென்ற விமானத்தில் திடீர் தொழில் நுட்ப கோளாறு!
Published on
Updated on
1 min read

துபாய் சென்ற விமானத்தில் திடீர் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணித்த 112 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாயிற்கு 105 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு வானில் பறக்க தொடங்கியது. விமானம் நடுவானில் பறந்த போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மீண்டும் சென்னையில் விமானம் அவசரமாக தரை இறங்கியது. 

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமான பொறியாளர் வல்லுநர்கள் தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. இதையடுத்து விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 112 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com