ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் புதிய தொழில்நுட்பம் !!!!!

ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் புதிய தொழில்நுட்பம் !!!!!
Published on
Updated on
2 min read

இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பு மற்றும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய அமைப்பு. நாட்டில் உள்ள மொத்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 8000 ஆகும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலிலேயே பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில் இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் மலிவானது மற்றும் வசதியானது, இதன் காரணமாக ரயில் போக்குவரத்து இந்தியாவின் உயிர்நாடியாக இன்றுவரை கருதப்பட்டு வருகிறது. 

ஆனால், நாட்டின் உயிர்நாடியாகக் கருதப்படும் ரயிலைக் கூட திருடர்களிடமிருந்து  காப்பாற்ற முடியவில்லை.  ரயில்களில் திருட்டுகள் என்பது மிக அதிகமாக இருந்து வருகிறது. ரயிலில் மின்விசிறிகள், பல்புகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடர்கள் திருடிச் செல்வதை பலமுறை கேள்விப்பட்டு வருகிறோம். ரயிலில் திருடினால் நீண்ட காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றாலும் திருட்டு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.  இதைத் தடுக்க, ரயில்வே இப்போது  ஒரு தந்திரத்தைக் கொண்டு வந்துள்ளது. அப்படி என்ன முறையை ரயில்வே எடுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

திருட்டு சம்பவங்களை தடுக்க இந்திய ரயில்வே புதிய தொழில்நுட்பத்தை ரயில்களில் பயன்படுத்தியுள்ளது. வீடுகளில் பயன்படுத்த முடியாத அளவிற்கு ரயில் மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பத்தை பொறியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த மின்விசிறிகளை ரயில்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் அவற்றின் காற்றை ரயிலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ரயிலுக்கு வெளியே யாராவது இந்த மின்விசிறிகளைப் பயன்படுத்த விரும்பினால், அது நிச்சயம் முடியாது. இப்போது இது எப்படி என்ற கேள்வி உங்கள் மனதில் நிச்சயம் எழுந்திருக்கும். இந்த மின்விசிறியில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். 

வீடுகளில் இரண்டு வகையான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது, முதல் ஏசி மற்றும் இரண்டாவது டிசி . வீட்டில் ஏசி மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதிகபட்ச சக்தி 220 வோல்ட், வீட்டில் டிசி பயன்படுத்தப்பட்டால், சக்தி 5, 12 அல்லது 24 வோல்ட்டாக இருக்கும். 

ரயிலில் பொருத்தப்பட்ட மின்விசிறிகளை பயன்படுத்த 110 வோல்ட் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த மின்விசிறிகள் டிசியில் மட்டுமே இயங்கும். வீடுகளில் டிசி சக்தி 5, 12 அல்லது 24 வோல்ட்டுகளுக்கு மேல் இல்லை, இதன் காரணமாக இந்த மின்விசிறிகளை வீட்டில் பயன்படுத்த முடியாது.

இந்த புது தொழில்நுட்பம் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இனி ரயிலில் திருட நினைக்கும் திருடன் டிக்கெட் வாங்கி திருடிய மின்விசிறியை ரயிலில் தான் பயன்படுத்தமுடியும்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com