எலான் மஸ்கின் X.com-ற்கு தடை... சிக்கலில் X.com??

எலான் மஸ்கின் X.com-ற்கு தடை... சிக்கலில் X.com??
Published on
Updated on
1 min read

எலான் மஸ்க், X.com என ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை மாற்றி இணையத்தில் ஒரு அதிரடியை காட்டியிருந்த நிலையில், இந்தோனேசிய தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டில் X.comஐ தடை செய்துள்ளது.

சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை X.com என மாற்றி இணையத்தில் ஒரு அதிரடியை காட்டியிருந்தார். பெயர் மாற்றத்தோடு சேர்த்து, X.com தலத்தில், செய்திகள், பணப்பரிவர்த்தனை மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது என, மேலும் அப்டேட்டுகளை வாரி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

பெயர்மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர், அதாவது X.com, அனைத்து நாடுகளிலும் செயல்படுத்தப்பட்ட நிலையில், ஒரு நாட்டில் X.com க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது இந்தோனேசிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம், X.com-ன் டொமைனை (Domain) தடை செய்துள்ளது. ஏனென்றால், X.com என்கிற டொமைனை, ஆபாச வலைத்தளங்கள் பயன்படுத்தி வருவதால், தற்போது மறுபெயரிடப்பட்டுள்ள X.com க்கும், இணையத்தில் உள்ள ஆபாச வலைத்தளங்களுக்கும் வேறுபாடுகள் தெரிவதில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக, X.com-மிடம் சிறந்த புரிதலை கோரியுள்ளது இந்தோனேசிய அரசு.

இந்நிலையில், தற்போது அந்நாட்டிலுள்ள 24 மில்லியன் மக்கள், இந்த தளத்தை உபயோகிக்க முடியாதவாறு, அந்நாட்டு அரசால் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் அறிக்கைபடி பார்த்தால், X.com-ன் மீது உள்நோக்கத்துடன் இந்த தடை பிறப்பிக்கப்படவில்லை என தெரிகிறது. ஏனென்றால், 2022ல், நெட்பிலிக்ஸ், கூகுள், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில், சட்டவிரோதமாக கருதப்படும் அல்லது சட்டத்திற்கு புறம்பான பதிவுகளை நீக்குவதற்கு, இந்தோனேசிய அரசு முன்னெடுப்பு எடுத்திருந்தது, என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, X.com என மறுபெயரிடப்பட்டுள்ளதால், அதனை இணையத்தில் தேடும்பொழுது, ஆபாசத்தளங்கள் முதலில் வந்து நிற்கும் என்பதால் தான், இந்த டொமைனை தடை செய்துள்ளது இந்தோனேசிய அரசு.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com