வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3 விண்கலம்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3 விண்கலம்..!
Published on
Updated on
3 min read

இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

உலக விண்வெளித்துறையில் இந்தியாவிற்கு மதிப்பும் நம்பிக்கையும் அளித்தது சந்திராயன் தான். இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச வல்லரசு நாடுகளுக்கு இணையாக கடந்த 2008 - ம் ஆண்டு இஸ்ரோவின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான் - 1 தான் நிலவில் நீரின் மூலக்கூறுகள்  இருப்பதை கண்டறிந்து   உலகுக்கு தெரியப்படுத்தியது. 

அதனையடுத்து, நிலவில் இந்தியர்கள் கால்தடன் பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டு Impacter லேண்டிங் செய்வதன் மூலமாக  நிலவில் என்னென்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்வதற்காக கடந்த 2019- ம் ஆண்டு,  நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலனமான சந்திரயான் 2  தனது 50%  சதவீத பணிகளை நிறைவேற்றியதற்கு பிறகு, தன்னுடைய இலக்கை செயல்படுத்த  கடைசி 15 நிமிடங்கள் இருக்கும் நேரத்தில்  அது தோல்வியடைந்தது. குறிப்பாக, Lander தரையிறங்கும் சமயத்தில் Soft Landing செய்யமுடியாமல் அந்த செயல்முறை தோல்வியில் முடிந்தது. 

இவ்வாறிருக்க, கடும் முயற்சியோடு, கடந்த முறை விழுந்த இடத்திலிருந்து பெறப்பட்த தரவுகளின் தகவல்களின் அடிப்படையில் தொழில்நுட்பரீதியான பல்வேறு மாற்றங்களை செய்து உருவாக்கப்பட்டுள்ளது தான் சந்திரயான் - 3.

சந்திரயான் 3 விண்கலத்தை சுமார் 613 ககோடி செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம்  LVM 3 M 4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி அய்யாவு மையத்திலுள்ள  இரண்டாவது ஏவுதளத்திலிருந்து  இன்று மதியம் சரியாக 2:35 நிமிடத்தில் விண்ணில் பாய்ந்தது. 

இதற்கான நேர என்ணிக்கை நேற்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் - 3  விண்கலத்தில் 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன உள்ளன. ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை Lander , Rover  கருவிகள் மட்டும் அனுப்பப்படுகிறது. இவை உந்துவிசை கலன் மூலம்,  நிலவின் சுற்று பாதைக்கு எடுத்து செல்லப்படும். அதன் பின் உந்து விசை கலனிலிருந்து Lander பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். 

தொடர்ந்து, Lander மற்றும் Rover கலஙன்கள்  14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள  7 ஆய்வு கருவிகள் நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுக்கு மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பின், நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய 4- வது நாடு என்ற பெருமையும்,  தென்துருவத்திற்கு சென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.  

இது குறித்தது இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயானின் லேண்டர்கள் நிலவின் தென்துருவத்தில், (அடுத்த மாதம்) ஆகஸ்ட்  23  அல்லது 24-ம் தேதி தரையிறக்கப்படவுள்ளது என்றும்,  கடந்த முறை ஏற்பட்ட தோல்வியின் கற்பிதங்களை அடிப்படையாக கொண்டு, நிலவின் சூழலுக்கேற்ப   Lander மற்றும் Rover கலஙன்கள்வ செயல்படுவதற்காக அதன் கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினர்.

மேலும், லேண்டரில் எரிபொருளும் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், லேண்டரின் கால் பகுதிகள் பலப்படுத்தப்பட்டு, பேரிக்காய் Solar Panel- கள் உட்பட சாதனங்கள் மேம்படுத்தப்பட்ட அதின்கீன வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர். 

கூடுதல் சிறை சிறப்பம்சமாக , சந்திரயான் திட்ட இயக்குனராக இருக்கும் வீர முத்துவேல் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com