சமீப காலமாகவே மக்கள் ஆர்டர் செய்யும் உணவில் பள்ளி,கரப்பான் பூச்சி என ஜீவராசிகள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த உணவில் நத்தை கிடந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று தனக்கும், தனது காதலருக்கும் ”டிப்டன்ஸ் பர்ண்ட் ட்ரீ” என்ற உணவகத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
வீட்டுக்கு உணவு வந்ததும் வழக்கம்போல் இருவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போதுதான் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சாப்பிடும் போது தனது உணவில் ஒரு நத்தை இருந்ததைக் கண்டு ஷாக்கான க்ளோ உணவை துப்பிவிட்டார். மேலும் நத்தை இருந்த உணவின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த சுகாதாரமற்ற உணவு குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்திடம் புகார் தெரிவித்ததையடுத்து, உணவுக்கான முழுப் பணத்தையும் உணவகம் க்ளோவிடம் செலுத்திவிட்டது. தொடர்ந்து 40 பவுண்ட் மதிப்புள்ள வவுச்சரும் கொடுத்து அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
இந்நிலையில், என்ன தான் நம் பணத்தை திருப்பி கொடுத்தாலும் சாப்பாட்டில் நத்தை கிடந்ததை என்னால் மறக்க முடியவில்லை எனவும், இனி அந்த உணவகத்தில் எப்போதும் உணவு வாங்கப்போவதில்லை எனவும் க்ளோ வால்ஷா சபதம் எடுத்துள்ளார்.