அமெரிக்கா சென்றடைந்த பிரதமா் மோடி...யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

அமெரிக்கா சென்றடைந்த பிரதமா் மோடி...யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!
Published on
Updated on
1 min read

அரசு முறை பயணமாக அமொிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று  நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ள யோகா தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறாா். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பிதழின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இரவு சென்றடைந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கிய தலைவா்கள் பிரதமா் மோடியை வரவேற்றனா். மேலும் அமொிக்க வாழ் இந்தியா்கள் வழி நெடுகிலும் காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து அவா் வான்வழியாக லோட்டே நியூயார்க் அரண்மனைக்கு புறப்பட்டு சென்றாா். அப்போது அவா் மன்ஹாட்டன் ஸ்கைலைன், சென்ட்ரல் பார்க் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தபடி சென்றாா்.

மோடியை வரவேற்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஹோட்டல் முன்பு காத்திருந்த ஏராளமான இந்திய புலம்பெயர்ந்தோர் கர்பா நிகழ்ச்சி நடத்தினர். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, எழுத்தாளர் மற்றும் கல்வியியல் பேராசிரியரான ராபர்ட் தர்மன், கட்டுரையாளர் மற்றும் புள்ளியியல் பேராசிரியரான நாசிம் நிக்கோலஸ் தலேப் ஆகியோரை சந்தித்து உரையாடினாா்.

தொடா்ந்து இன்று நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ள யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பின்னர், அங்கிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு செல்லும் பிரதமர் மோடி, இன்று இரவு அதிபர் ஜோ பைடன் தம்பதியர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் சிறப்பு இரவு விருந்தில் பங்கேற்கிறார். இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் பங்கேற்க உள்ளனர்.

தொடா்ந்து அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா். 

அதனை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நாளை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன் பின்,  23-ம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசுகிறார். 

மேலும் இப்பயணத்தின்போது, பாதுகாப்பு துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25-ம் தேதிகளில் பிரதமர் மோடி எகிப்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com