கர்நாடக மாநிலம் எல்லையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு எருமைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் புலி ஒன்று அதனை தாக்கி வந்ததை பார்த்த பிற எருமைகள் புலியிடம் இருந்து எருமையை காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகிய இரண்டும் இணைந்த வனப்பகுதியாக சொல்லப்படுகிறது.இந்த வனப்பகுதிகளில் ஏராளமான புலிகள் வாழ்ந்து மற்றும் வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வளர்ப்பு எருமைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அதனை கண்ட புலி எருமைகளை விரட்டியடிக்க தாக்கியுள்ளனர்.இதில் புலியடம் சிக்கிய எருமையை பாதுகாத்து மீட்க எருமைகள் அனைத்தும் ஒன்று கூடி புலியை தாக்கி விரட்டியடித்தனர்.