நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் பிரதமர் மோடி...!

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் பிரதமர் மோடி...!
Published on
Updated on
2 min read

அமொிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி இன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

அரசு முறை பயணமாக 3 நாட்கள் அமொிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, நேற்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அதனை தொடர்ந்து இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

அதற்காக வாஷிங்டனில் உள்ள டிசிக்கு பிரதமர் மோடி சென்றடைந்தாா். அங்கு அவருக்கு தூறல் மழைக்கு மத்தியில் சம்பிரதாய வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்களும் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார்.

இதற்கிடையே வாஷிங்டனுக்கு பிரதமா் மோடி வருகை புாிந்ததையொட்டி அமொிக்கா வாழ் இந்தியா்கள் ஏராளமானோா் வழி நெடுகிலும் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனா். மேலும் ஏராளமானோா் உற்சாகமாக நடனமாடி மோடியை வரவேற்றனா். 

தொடா்ந்து அப்ளைடு மெட்டீரியல்ஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேரி இ.டிக்கர்சன், எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியா் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினாா். 

இதனைத்தொடா்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடென் ஆகியோர் அதிகாலை வர்ஜீனியாவின்  அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்கு சென்றனா். அங்கு அவர்கள் கல்வி மற்றும் பணியாளர்களுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் பகிர்ந்துள்ள முன்னுரிமையை எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய மோடி, ஒருபுறம் அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய இளைஞர் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. அதனால் தான், இந்தியா- அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று நம்புவதாக தொிவித்தாா்.

மேலும் பேசிய அவா், பள்ளிகளில் சுமார் 10 ஆயிரம் அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவியிருப்பதாகவும், அதில் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கண்டுபிடிப்புகளுக்கான அனைத்து வகையான வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தொிவித்தாா். இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' என்ற பணியைத் தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டாா். 

அதனை தொடா்ந்து பிரதமா் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றாா். அங்கு அவருக்கு மாியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து மோடி ஜோபைடனை சந்தித்து பேசினாா். நாளை அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசுகிறார். தொடா்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வரும் 24, 25-ம் தேதிகளில் எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com