சண்டிகர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனங்களை முந்திச் செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியதில் விபத்து நேரிட்டதாகவும், இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கதினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பாலா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த விபத்தில் இரண்டு பேருந்துகள் கடுமையாக சேதமடைந்ததால் அவை கிரேன்கள் மூலம் நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து நடந்த பின்னர் பேருந்தின் ஓட்டுநர், அந்த இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.மேலும் அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.