அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம்...!!  தா.மோ.அன்பரசன்...!!

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம்...!!  தா.மோ.அன்பரசன்...!!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், நெய்வேலி தொகுதியில் ஏற்றுமதி தொழிற் பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா எனவும், முந்திரி ஏற்றுமதி அதிக அளவில் செய்யப்படுவதால் ஏற்றுமதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடலூர் மாவட்டத்தில் தொழிர்துறை ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்யும் பொருட்களை கண்டறிந்து, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஓசூர், கோவை, மதுரை திருச்சி ஆகிய 4 இடங்களில் 16 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் ஏற்றுமதி மையம் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com