பொறியியல் கலந்தாய்விற்கான அட்டவணை இன்று வெளியீடு!

பொறியியல் கலந்தாய்விற்கான அட்டவணை இன்று வெளியீடு!
Published on
Updated on
1 min read

பொறியியல் கலந்தாய்விற்கான அட்டவணையை இன்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை பணியினை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்காக கலந்தாய்வுக்கு 1,87,847 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து  இருந்தனர். அதில் தகுதியுள்ள 1,78,959 மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே ஜூலை 2ந் தேதி  கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வுக்கு முன்பு பொறியியல்  கலந்தாய்வு  நடத்தப்பட்டால் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகும் என்பதாலும், ஒரே நேரத்தில் இரண்டு கலந்தாய்வையும் நடத்துவது மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மருத்துவ கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொறியியல் கலந்தாய்வு தேதி  இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான கலந்தாய்வு அட்டவணையும் வெளியிடப்பட உள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் கலந்தாய்வு அட்டவணையை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com