சி.ஏ.பி.எப் தேர்வை தமிழில் எழுதலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சி.ஏ.பி.எப் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே சிஏபிஎப் தேர்வுகள் தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிஏபிஎஃப் என அழைக்கப்படும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் இனி தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்புக்கு உத்வேகத்தை அளிக்கும் எனவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் தாம் எழுதிய கடிதத்தின் விளைவாகவே மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவிப்பிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் !!